காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்றால்... என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது....! ஆவேசமான அமைச்சர் முத்துச்சாமி
காலையில் கடுமையான வேலைக்குச் செல்பவர்கள் மது அருந்தும் போது அவர்களை குடிகாரர்கள் என்று கூறுவதை தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் ஒண்டிபுதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ-மாணவிகளுக்கு மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துச்சமி, டெட்ரா மதுபாக்கெட்டை கொண்டு வரலாமா? என்று அரசு ஏன் யோசித்தது என்பதற்கான காரணத்தை விளக்கினார்.
90 எம்.எல் கொண்டு வருவது குறித்த பிரச்னையை தான் யாரிடம் சென்று பேசுவது? வீட்டில் தனியாக பேசிக்கொள்ளவா? என்றும் ஆதங்கப்பட்டார் அமைச்சர் முத்துசாமி.
காலையில் மது குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொன்னால் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் எதற்காக குடிக்கின்றார்கள் தெரியுமா என்றும் கேட்டு ஆவேசமானார் அமைச்சர் முத்துசாமி.
டாஸ்மாக்கில் விற்பனை ஏன் குறைகிறது என்று மாதந்தோறும் சர்வே செய்வதற்கான விளக்கமும் அளித்தார் அமைச்சர்.
புதியதாக கடைக்கு வரும் இளைஞர்களுக்கும், இனிமேல் குடித்தால் அவ்வளவுதான் என்ற நிலையில் உள்ள முதியவர்களுக்கும் கவுன்சிலிங் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் முத்துசாமி.
கேவலப்படுத்தாமல் ஆலோசனைகளை வழங்குங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் அமைச்சர் முத்துசாமி.
Comments