சந்திரயான்-3 இரண்டாவது உயரம் உயர்த்தும் நடவடிக்கை வெற்றி.... விண்கலம் தற்போது 41603 கி.மீ x 226 கி.மீ. வட்டப் பாதையில் உள்ளது...!
சந்திரயான் - 3 விண்கலத்தின் 2-வது உயரம் உயர்த்தும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திரயான் - 3 விண்கலம் தற்போது 41 ஆயிரத்து 603 கிலோ மீட்டருக்கு 226 கிலோ மீட்டர் தூரமுள்ள சுற்றுவட்டப் பாதையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான் - 3 விண்கலத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அடுத்த கட்ட உயரம் உயர்த்தும் நடவடிக்கை செவ்வாய் பிற்பகல் 2 முதல் 3 மணிக்குள் நடைபெறும் என்று தெரிவித்துள்ள இஸ்ரோ, தற்போது சந்திரயான் - 3 விண்கலம் நல்ல நிலையில் இயங்கி வருவதாகவும் கூறியுள்ளனர்.
Comments