ஜப்பான், தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டுப் பயிற்சி.. ஏவுகணைகளின் இலக்கை கண்டறிந்து தகவல்களை பகிர்வது குறித்து பயிற்சி.. !!
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி பரிசோதித்ததை அடுத்து ஜப்பான், தென்கொரியா மற்றும் அமெரிக்கா கடற்படைகள் இணைந்து கூட்டுப் பயிற்சி மேற்கொண்டன.
கடந்த புதன்கிழமை அன்று, வடகொரியாவின் மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படும் ஹவாசாங்-18 ஏவுகணையை அந்நாடு ஏவி சோதனை நடத்தியது.
இது அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது என நம்பப்படுகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக முத்தரப்பு பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், பாலிஸ்டிக் ஏவுகணைகளின் இலக்கை கண்டறிந்து தகவல்களை பகிருவது குறித்து பயிற்சிகளை மேற்கொண்டன.
Comments