கடனில் இருக்கும்போது ரூ.40 கோடி செலவில் இது முக்கியமா ?.. இந்தியாவை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் அரசை கேலி செய்யும் நெட்டிசன்கள்..!!

0 23331

அண்டை நாடான இந்தியா, சந்திரயான் விண்கலத்தையே விண்ணுக்கு அனுப்பிவிட்ட நிலையில், பாகிஸ்தானிலோ 500 அடி உயரக் கம்பத்தில் தேசியக் கொடியை வானுயர பறக்க விடுவதற்கு அரசு ஆர்வம் காட்டுவதாக, அந்நாட்டு நெட்டிசன்கள் அரசை கேலி செய்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அந்நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாண அரசு, 40 கோடி ரூபாய் செலவில், 500 அடி உயரக் கம்பத்தில் தேசியக் கொடியை பறக்கவிட திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே மாகாண அரசு கடனில் மூழ்கியுள்ள நிலையில், இந்த பெரும்செலவு தேவையா என்பது பாகிஸ்தான் நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments