சட்ட கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்ட 'சத்தியதேவ் லா அகாடமி'.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!

0 1488

அரசு கல்லூரிகளில் சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ”சத்தியதேவ் லா அகாடமி”யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் இயங்க உள்ள இந்த அகாடமியில், சட்ட கல்லூரி மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில், சட்ட நிபுணர்களாலும், சட்ட ஆசிரியர்களாலும் பாடங்கள் விளக்கப்பட்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

காணொலி தயாரிப்புக்கான செலவை நடிகர் சூர்யாவின் 2-டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் வழங்க இருக்கிறது.

தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments