100-க்கும் மேற்பட்ட கால் டாக்சி ஓட்டுநர்களை குறிவைத்து பண மோசடி செய்த போலி மருத்துவர் கைது...!
கால் டாக்சி ஓட்டுநர்களை மட்டுமே குறிவைத்து 100-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், தொழில் அதிபர்கள் ,ஓட்டல் உரிமையாளர்கள் என பலரிடம் பணம் வசூலித்து தப்பி சென்ற போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் ஆந்திராவை சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.அதில் தமது காரை புக் செய்த மருத்துவர் ஒருவர் தம்மை ஏமாற்றி 8 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்பேசியை பறித்து சென்று விட்டதாக கூறி இருந்தார். இந்த நிலையில் கார் புக் செய்த மொபைல் எண் மற்றும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சஞ்சய் வர்மா என்பவரை விருகம்பாக்கத்தில் வைத்து கோடம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட கால்டாக்சி ஓட்டுநர்களை வரவழைத்து அவர்களிடம் மருத்துவர் போல உடை அணிந்து நம்பும்படி பேசி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது. மேலும் மோசடி செய்து பணம் மற்றும் செல்போன்களை விற்று கிடைத்த பணத்தில் கோவா சென்று பெண்கள், மது, சூதாட்டம் என உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
Comments