தரமான கல்வி வழங்குவதில் தமிழ் நாட்டை முதலிடத்துக்கு கொண்டு வருவதற்கான பணிகளை செய்து வருகின்றோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1216

தரமான கல்வி வழங்குவதில் தமிழ் நாட்டை முதலிடத்துக்கு கொண்டு வருவதற்கான பணிகளை செய்து வருகின்றோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா நூலக திறப்பு விழாவில்  உரையாற்றிய அவர்,வருகிற செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப் போகிறோம் என்றார்  தகுதியு டையகுடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் போகிறது.

என தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின்  இத்தனை ஆயிரம் கோடி மதிப்பிலான பெரிய சமூகநலத் திட்டம் இதுவரை இல்லை என்று சொல்கின்ற மாதிரி மாபெரும் திட்டமாக அந்தத் திட்டம் உருவாக்கப்பட இருக்கிறது என்றார்.

மேலும்  படிக்கின்ற காலத்தில் மாணவர்களுக்கு கவனச் சிதறல்கள் வேண்டாம். படிப்பு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படுங்கள் என அறிவுறுத்தினார்.தமிழ்நாடு அனைத்துத் துறையிலும், முன்னேறி இந்தியாவோட தலைசிறந்த மாநிலமாக ஆனது என்று சொல்லவேண்டும். அந்த ஒற்றை இலக்குடன்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றும் முதல்வர் உரையாற்றினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments