சந்திரயான் 3 விண்கலத்தின் முதல் சுற்றுப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது - இஸ்ரோ
சந்திரயான்-3 விண்கலத்தின் முதல் சுற்றுப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் ஏவப்பட்ட விண்கலம் நல்ல நிலையில் இருப்பதாகவும், தற்போது பூமிக்கு மிக அருகில் 173 கிலோ மீட்டர் மற்றும் பூமிக்கு தொலைவில் 41 ஆயிரத்து 762 கிலோ மீட்டர் என்ற சுற்றுப்பாதையில் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்கலம் பூமியின் நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்த பிறகு நிலவின் சுற்றுப்பாதைக்கு மாற்றப்பட்டு, பின்னர் நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும். இந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக முதல்முறை பூமியின் நீள் வட்டப்பாதையை சந்திராயன் 3 விண்கலம் சுற்றி வந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
Comments