தங்கும் விடுதி அறையில் ஹிட்டன் கேமரா பொருத்தி கண்காணித்ததாக புகார்.. விடுதி உரிமையாளர், பொறுப்பாளர் கைது..!!
புதுச்சேரியில் தங்கும் விடுதி அறையில் ரகசிய கேமரா பொருத்தி கண்காணித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விடுதி உரிமையாளரையும், பொறுப்பாளரையும் போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள ஜெஜெ ரெசிடன்சி என்ற அந்த விடுதியில் 3 நாட்களுக்கு முன்பு புதுவையைச் சேர்ந்த ஒருவர் தனது தோழியுடன் அறையெடுத்து தங்கியிருந்தார்.
அப்போது ரகசிய இடத்தில் கேமரா பொருத்தப்பட்டிருந்ததை அவர் கண்டு விடுதி உரிமையாளரிடமும், ஊழியர்களிடமும் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் இது பற்றி கண்டுகொள்ளவில்லை என்று கூறி கேமரா பொருத்தப்பட்டிருந்ததற்கான ஆதாரங்களுடன் உருளையன்பேட்டை போலீஸில் அவர் புகாரளித்தார்.
இதன் பேரில் விடுதி உரிமையாளர் இளையாழ்வார் , பொறுப்பாளர் இருதயராஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விடுதி ஊழியர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments