தோல்வியில் முடிவடைந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை.. என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு..!!
கடலூரில் நடைபெற்ற என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் பிரச்சினை தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி பணி நிரந்தரம், பணி நிரந்தரம் செய்யப்படும் வரை குறிப்பிட்ட ஊதியம் என்ற 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.
இதையடுத்து என்எல்சி அதிகாரிகள் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
இதையடுத்து வேலை நிறுத்தம் தொடர்பாக இன்று இரவு அறிவிப்பு வெளியிடப்படும் என ஒப்பந்தத் தொழிலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments