ஹாலிவுட்டை ஸ்தம்பிக்க வைத்த இரண்டு வேலை நிறுத்தப் போராட்டங்கள்

0 1991
ஹாலிவுட்டை ஸ்தம்பிக்க வைத்த இரண்டு வேலை நிறுத்தப் போராட்டங்கள்

ஹாலிவுட்டில் ஏற்கனவே 57 ஆயிரம் திரை எழுத்தாளர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஹாலிவுட் நடிகர்கள் சங்கமும் லாபத்தில் பங்கு கோரி தயாரிப்பாளர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.

டிஸ்னி, நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சித் தயாரிப்பாளர்களை உள்ளடக்கிய Alliance of Motion Picture and Television Producers அமைப்புக்கு எதிராக வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளவும் சிவப்புக்கம்பள வரவேற்புகளில் கலந்துக் கொள்ளவும் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் நடிகர் நடிகைகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்.

முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஜெனிஃபர் லாரன்ஸ் மெரில் ஸ்ட்ரீப் உள்ளிட்டோரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து படப்பிடிப்புகளை நிறுத்தி நடிகர் நடிகைகள் வெளியேறினர். இதனால் கிளாடியேட்டர் அவதார் போன்ற படங்களுக்காக பெரும் பொருட்செலவில் போடப்பட்டிருந்த செட் களும் ஸ்டூடியோக்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments