பொது சிவில் சட்டம் குறித்து கருத்துக்களைத் தெரிவிக்க காலக்கெடு நீட்டிப்பு
பொது சிவில் சட்டம் குறித்து கருத்துக்களை சமர்ப்பிப்பதற்கான தேதியை சட்ட ஆணையம் நீட்டித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் கூறியிருந்தது. இந்தக் காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் சட்ட ஆணையத்திற்கு கோரிக்கைகள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிவில் சட்டம் குறித்து கருத்துக்களை மேலும் இரு வாரங்களுக்குக் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள எந்தவொரு தனிநபரும், நிறுவனம் அல்லது அமைப்பும் ஜூலை 28 ஆம் தேதி வரை சிவில் சட்டம் பற்றிய கருத்துக்களை ஆணையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Comments