குளிர்பானத்தில் சேர்க்கப்படும் அஸ்பர்டேம் என்ற வேதிப்பொருளால் புற்றுநோய் ஏற்படலாம் - உலக சுகாதார மையம் எச்சரிக்கை
குளிர்பானங்களில் சேர்க்கப்படும் அஸ்பர்டேம் என்ற வேதிப்பொருளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
குளிர்பானம், ஐஸ்கிரீம், டூத் பேஸ்ட், இன்ஸ்டண்ட் காபி போன்றவற்றில் இனிப்பு சுவையை அதிகரிப்பதற்காக அஸ்பர்டேம் சேர்க்கப்படுகிறது. அஸ்பர்டேம் குறித்து உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட ஓரளவிற்கு வாய்ப்புள்ளது தெரியவந்தது.
வலுவான ஆதாரம் கிடைக்காததாலும், மனிதர்களால் மிகவும் குறைவான அளவிலேயே அஸ்பர்டேம் எடுத்துக்கொள்ளப்படுவதாலும் பெரிதாக பொருட்படுத்தத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments