அச்சமின்றி வழக்கை சந்திப்போம்.. அமைச்சரை போல மருத்துவமனையில் சேர மாட்டோம்.. அண்ணாமலை அதிரடி..!

0 2895

எத்தனை வழக்குகளை தன் மீது தொடர்ந்தாலும் அதனை அச்சமின்றி சந்திக்கத் தயாராக இருப்பதாக, பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அமைச்சரைச் போல் நெஞ்சுவலி எனக்கூறி மருத்துவமனையில் சேர மாட்டோம் என்றார் அவர்.

திமுக முக்கிய நிர்வாகிகளின் சொத்துக்கள் பட்டியலை கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி DMK Files என்ற பெயரில் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில் தன்னைப் பற்றிய தகவல்கள் அவதூறானவை என்று கூறி திமுக எம்.பி டி.ஆர்.பாலு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டதன் பேரில் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதைத் தொடர்ந்து வழக்கை ஆகஸ்ட் 3ஆவது வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, சொத்துக்கள் பட்டியலை வெளியிட்ட தன் மீது வழக்குத் தொடர்ந்துள்ள டி.ஆர்.பாலு, 2014-ஆம் ஆண்டு அவர் மீது முறைகேடு புகார் தெரிவித்த மு.க.அழகிரி மீது ஏன் வழக்குத் தொடரவில்லை என்றார்.

தன் மீது டி.ஆர்.பாலு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், அவரது குடும்பத்தினரையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

DMK Files Part-2 தயாராக உள்ளதாகவும், அதில் பினாமிகள் 300 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.

தன் மீதான எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அதனை அச்சமின்றி சந்திக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்த அண்ணாமலை, அமைச்சர் ஒருவரைப் போல், நெஞ்சுவலி எனக்கூறி மருத்துவமனையில் சேர மாட்டோம் என்றார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments