பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் சூறைக்காற்றுடன் மழை.. சாலைகள், வீடுகள் தண்ணீரில் தத்தளிப்பு..!!
பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் வீசிய மழைக்கு ஒருவர் பலியாகி உள்ள நிலையில் அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தெற்கு பிரேசில் பகுதியை சக்திவாய்ந்த புயல் தாக்கியது, இதில் சாலைகள் மற்றும் வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் பல இடங்களில் வெப்ப மண்டல சூறாவளி உருவாவதால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பலர் தங்கள் நகரங்களில் உள்ள விளையாட்டு அரங்குகளில் தஞ்சம் அடைந்தனர். பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Comments