திமுக என்றும் சிறுபான்மையின மக்களுடன் நிற்கும் - தூத்துக்குடி எம்பி கனிமொழி
திமுக என்றும் சிறுபான்மையின மக்களுடன் நிற்கும் என தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
காயல்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த ஒரு பொதுதேர்தல் வந்தாலும் புதிய திட்டங்கள், மசோதாக்களை கொண்டு வந்து தேர்தல் வந்தால் பொய் உரை கூறி பெரும்பான்மையான மக்களை ஏமாற்றக்கூடிய சூழ்நிலை தான் தற்போது நிலவுகிறது என்றார்.
ஆனால் திமுக அரசு என்றும் சிறுபான்மையின மக்களுடன் நிற்கும், சமூகத்தில் யாரெல்லாம் ஒதுக்கப் படுகிறார்களோ ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்கான ஆட்சி திமுக ஆட்சி என உறுதியாக சொல்கிறேன் என்றார்.
Comments