உலகின் பழமையான மொழி தமிழ் - பிரான்சில் இந்திய வம்சாவளி மக்களிடையே பிரதமர் மோடி புகழாரம்
உலகின் மிகப்பழமையான மொழி தமிழ் என பிரான்சில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
பாரிஸ் நகரில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய மோடி, இந்திய, பிரான்ஸ் இடையேயான நட்புறவு மேலும் வலுவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
100 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சின் பெருமையைக் காக்கும் வகையில் கடமையாற்றிய இந்திய வீரர்கள் உயிரிழந்ததை நினைவுகூர்ந்த மோடி, பிரான்சின் தேசிய தின அணிவகுப்பில் பஞ்சாப் ரெஜிமென்ட் பங்கேற்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.
உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் என்று குறிப்பிட்ட பிரதமர், உலகின் பழமையான மொழி இந்தியாவில் உள்ளது என்பதை விட வேறு என்ன பெருமை வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
திருவள்ளுவருக்கு பிரான்சில் சிலை வைக்கப்படும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, அது இந்தியாவுக்குக் கிடைத்த பெருமை என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், 5 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார நிலையை இந்தியா விரைவில் எட்டிப் பிடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Comments