நொறுக்கு தீனிகளின் அதீத விலை குறித்த ட்வீட் வைரலானதை அடுத்து அதிரடி விலைக் குறைப்பை அறிவித்த பி.வி.ஆர் சினிமாஸ்!

0 5199

பி.வி.ஆர் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றில் விற்கப்பட்ட நொறுக்கு தீனிகளின் அதீத விலை குறித்து பார்வையாளர் ஒருவர் ட்விட்டரில் குற்றஞ்சாட்டியதை அடுத்து, பிவிஆர் நிறுவனம் அதிரடி விலைக் குறைப்பை அறிவித்துள்ளது.

அண்மையில் நொய்டாவில் உள்ள பி.வி.ஆர் மல்டிபிளக்ஸில் விற்கப்பட்ட 55 கிராம் சீஸ் பாப்கார்ன், 600 மில்லி பெஃப்சிக்கு மொத்தமாக 820 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக வாடிக்கையாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இது ஓ.டி.டி தளமான அமேசான் ப்ரைமின் ஆண்டு சந்தாவிற்கு சமம் என்றும், மக்கள் திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பதென்பது கட்டுப்படியாகாத ஒன்றாகிவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இந்த ட்வீட் வைரலானதை அடுத்து, அவரது ட்வீட்டுக்கு பதிலளித்த பி.வி.ஆர் சினிமாஸ் விலைக் குறைப்பை அறிவித்தது. அதன்படி, திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 முதல் மாலை 6 மணி வரை பர்கர், சமோசா மற்றும் 450 மில்லி பெப்சி-சாண்ட்விட்ச் தலா 99 ரூபாய்க்கு வழங்குவதாகவும், வாரயிறுதி நாட்களில் வெள்ளி முதல் ஞாயிறு வரை விலை ஏதும் குறிப்பிடாமல் அளவுக் கட்டுப்பாடின்றி பாப்கார்ன், பெப்சி வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments