தமிழ்நாட்டில் ஜூலை 22 ஆம் தேதி தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு - அமைச்சர் பொன்முடி

0 6254

தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு, வரும் 22 ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.

நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அவர் இன்று வெளியிட்டார். 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் கூறினார்.

28 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 3 ஆம் தேதி வரை 3 கட்டங்களாகப் பொதுப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடத்தப்படும் என்றார்.

7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம், அரசுப் பள்ளி மாணவர்கள் 11 ஆயிரத்து 804 பேர், இந்தாண்டு பொறியியல் படிப்புகளில் சேர்க்கப்பட இருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கல்லூரிகளில் காலியிடம் இருந்தால் அவற்றை நிரப்ப, தேவைப்பட்டால் கூடுதலாக ஒரு கலந்தாய்வு நடத்தப்படும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments