மலைவாழ் மக்களுக்கு சொந்த செலவில் ரேசன் பொருட்களை வழங்கிய பாஜகவினர்.. தடுத்து நிறுத்தி விரட்டிய திமுகவினர்..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மலைவாழ் மக்களுக்கு ரேஷன் பொருட்களை சொந்த செலவில் லாரி மூலம் கொண்டு சென்று வழங்கிய போது பாஜகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நெக்னாமலை மலை கிராம மக்கள் சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆகியும் சாலை வசதி , மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வரும் நிலை உள்ளது.
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்களின் சொந்த பணத்தில் வேன் மூலம் நியாய விலைக்கடை விற்பனையாளர் மற்றும் ஊழியர்களுடன் ரேஷன் பொருட்களை கொண்டு சென்று அங்குள்ள மலைகிராம மக்களுக்கு வழங்கியுள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதி திமுகவினர் அதனை தடுத்து நிறுத்தி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களை அங்கிருந்து விரட்டியதால் பல குடும்பங்கள் ரேஷன் பொருட்கள் வாங்காமல் திரும்பிச் சென்றனர்.
Comments