உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்.. ஜி7 நாடுகளின் அறிவிப்புக்கு ரஷ்யா கடும் கண்டனம்..!!
உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் கொடுக்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்ததற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜி7 எனப்படும் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், கனடா, இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து வெளியிட்ட கூட்டுப் பிரகடனத்தில், உக்ரைனுக்கு, நவீன மேம்பட்ட ராணுவ உபகரணங்கள், பயிற்சி, உளவுத்துறை பகிர்வு மற்றும் இணைய பாதுகாப்பு போன்றவை அளிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள கிரம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளின் இந்த முடிவு அபாயங்களை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments