யமுனை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு அதிகரிப்பு... டெல்லியின் முக்கிய சாலைகளில் புகுந்த ஆற்று நீர்
யமுனை நதியின் நீர்மட்டம் 207.71 மீட்டரை எட்டிய நிலையில், கரையோரங்களிலும், டெல்லியின் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது.
கரையோரப் பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் முன்பு நின்று செல்பி எடுக்க கூடாது என்றும் பொதுமக்களை டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. நகரில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக 50 படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
யமுனையில் வெள்ளப்பெருக்கு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் பின்னர் மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் நிவாரண உதவி கோரி கடிதம் எழுதியுள்ளார்.
Comments