தெற்கு ரயில்வேயில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.934 கோடி நிதி ஒதுக்கீடு..!!
அம்ரீத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் 90 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,275 ரயில் நிலையங்களை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 ரயில்வே கோட்டங்களில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த 934 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் 90 முக்கிய ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு பயணிகள் காத்திருப்போர் அறைகள், சிற்றுண்டி கடைகள், ரயில் வருகையை காட்சிப்படுத்தும் டிஜிட்டல் பலகைகள், நகரும் படிக்கட்டு, சிசிடிவி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Comments