16 வயதினிலே உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ராஜ்கண்ணு உடல் நலக் குறைவால் காலமானார்..!!
16 வயதினிலே ,மகாநதி உட்பட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ராஜ்கண்ணு உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
77 வயதான ராஜ்கண்ணு, சென்னை சிட்லப் பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ‘16 வயதினிலே’ ’கிழக்கே போகும் ரயில்’ ‘கன்னிப்பருவத்திலே’ ’வாலிபமே வா’ ’பொண்ணு பிடிச்சிருக்கு’ ’எங்க சின்ன ராசா’ மற்றும் கமல்ஹாசனின் ’மகாநதி’ ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
சிலர் மட்டுமே வந்து நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், திரையுலகினர் யாரும் வரவில்லை என அவர்களது குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர்.
Comments