பேருந்தில் நீதிபதி இருப்பது தெரியாமல் பயணியிடம் டிக்கெட்டிற்கு கூடுதலாக ரூ.5 கேட்ட நடத்துநர்.. நீதிமன்றத்திற்கு அழைத்து கண்டிப்பு!!
நெல்லையில் தான் பயணித்த பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து நீதிபதி கண்டித்தார்.
நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசு பேருந்தில் நாங்குநேரியைச் சேர்ந்த பார்வதிநாதன் என்பவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, பேருந்து கட்டணமாக கூடுதலாக 5 ரூபாய் நடத்துனர் கேட்டதால் எதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கிறீர்கள் என பார்வதிநாதன் கேட்டுள்ளார். இதனால் பேருந்து நடத்துநருக்கும், பார்வதிநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அதே பேருந்தில் பயணித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கிளாட்ஸ்டோன் பிளஸ்ட் தாகூர் நடந்த அனைத்தையும் கவனித்து வந்துள்ளார்.
பின்னர் நீதிமன்றத்திற்கு போக்குவரத்து கழக அதிகாரிகளை வரவழைத்து பார்வதி நாதனிடம் பேருந்தில் நடந்தவற்றை கூறுமாறு தெரிவித்துள்ளார்.
இதே நிலை தொடர்ந்தால் போக்குவரத்து கழகத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார். பேருந்தில் நடந்தவை தொடர்பாக வழக்கு தொடர உள்ளதாக பார்வதிநாதன் தெரிவித்தார்.
Comments