சீனாவின் பல மாகாணங்களை புரட்டிப் போட்ட வெள்ளம் - 40,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
வெள்ள பாதிப்பின் காரணமாக சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
சீனாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதோடு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். பலர் உயிரிழக்கவும் நேர்ந்தது.
ஹெனான், ஜியாங்சு, குவாங்டாங் உள்ளிட்ட மாகாணங்களிலும் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், வியாழன் காலை வரை கனமழை தொடரக்கூடும் என வானிலை மையம் எச்சரிகை விடுத்துள்ளது.
Comments