44 ஆண்டுகளில் இல்லாத அளவாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, டெல்லியின் யமுனை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் கனமழையால் ஹரியானாவின் ஹத்னிகுண்ட் அணை நிரம்பி, விநாடிக்கு 4 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதுவே, யமுனையில் நீர்மட்டம், 207 புள்ளி 5 மீட்டராக உயர்ந்துள்ளதற்கு காரணம்.
கடைசியாக 1978 ஆம் ஆண்டு 207 புள்ளி 4 மீட்டராக வெள்ளம் பெருக்கெடுத்ததே உச்ச அளவாக இருந்தது. தற்போது அதைத் தாண்டி கரை புரண்டு ஓடுவதால் யமுனை ஆற்றில் அமைந்துள்ள பழைய ரயில் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஓக்லா அணையில் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன.
வரலாறு காணாத வெள்ளப் பெருக்கால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
Comments