உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்ததால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் கையிருப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு உணவுப் பொருட்களை விடுவிப்பது நிலைமையை எளிதாக்கும் என்பதால், மாதம் ஒன்றுக்கு தலா 10 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒதுக்கீடு செய்ய அவர் வலியுறுத்தியுள்ளார்.
சில உணவுப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, அதனை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments