சிக்னல் கோட்டை தாண்டிய சரக்கு வாகனம்...சாவியை போலீசார் எடுத்ததால் ஓட்டுநர் கடும் வாக்குவாதம்..!!
வேலூர் அருகே காட்பாடியில் சாலை விதிகளை மீறிய சரக்கு வாகனத்தை போலீசார் மடக்கியதால் ஓட்டுநர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சதீஷ் என்ற அந்த ஓட்டுநர், தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான மினி வேனை ஓட்டிச் சென்றார். சித்தூர் பேருந்து நிலையம் அருகே, சிக்னல் எல்லைக் கோட்டைத் தாண்டி அவர் வாகனத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வேனில் இருந்த சாவியை எடுத்த போக்குவரத்து போலீசார், சீருடை அணியாமல் வந்தது ஏன் என்று கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து ஓட்டுநர் சதீஷ் தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி அந்த போலீசுடன் கடும் வாக்குவாதம் செய்தார்.
இந்த வாக்குவாதத்தால், சாலையில் மக்கள் கூடினர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதையடுத்து, காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், சீருடை அணியாததற்கு மட்டும் 500 ரூபாய் அபராதம் விதித்து அந்த வாகனத்தை அவர் விடுவித்தார். அதன் பிறகே அங்கு போக்குவரத்து சீரானது.
Comments