டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மழை காரணமாக 20 விமானங்கள் ரத்து

0 1567

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மழை காரணமாக 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் 120 விமானங்கள் தாமதமாகின. இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பலமணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து தர்மசாலா, சிம்லா லே போன்ற பகுதிகளுக்கு செல்ல இருந்த 20 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

டெல்லியைப் போலவே மலைப் பிரதேசங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் விமானங்கள் ரத்தாகின.120க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments