மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றியது திரிணாமூல் காங்கிரஸ்....!
மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான இடங்களை திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ள நிலையில் 2ஆவது இடத்தை பா.ஜ.க. பிடித்துள்ளது.
அம்மாநிலத்தில் கடந்த 8-ஆம் தேதியன்று கிராம பஞ்சாயத்து, கிராம சமிதி என மொத்தம் 73 ஆயிரத்து 887 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலின்போது நடந்த வன்முறையால் 696 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இவற்றைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் இதுவரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்து பதவியிடங்களையும், பாஜக 2 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட இடங்களையும் கைபற்றியுள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல், இடதுசாரி 960க்கும் மேற்பட்ட இடங்களிலும், காங்கிரஸ் 620க்கும் மேற்பட்ட இடங்களிலும் வென்றுள்ளன.
வாக்கு எண்ணிக்கை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கக் கூடும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரித்துள்ளார்.
Comments