இந்தியாவில் விரைவில் ஐபோன் உற்பத்தியில் இறங்கும் டாடா நிறுவனம்..?

0 1507

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை இந்தியாவில் விரைவில் டாடா நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது கர்நாடகத்தில், தைவானை தலைமையகமாக கொண்ட விஸ்டிரான் (Wistron) என்னும் நிறுவனம் ஐஃபோன்களை உற்பத்தி செய்கிறது.

அந்நிறுவனம் தான், கடைசியாக வெளிவந்த ஐஃபோன் - 14 மாடலை உற்பத்தி செய்தது. பத்தாயிரம் பேர் பணியாற்றும் அந்த தொழிற்சாலையை, டாடா நிறுவனம் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாகவும், இதற்காக ஓராண்டாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், அடுத்த மாதம் டாடா வசமாகலாம் எனவும் கூறப்படுகிறது.

இதன்மூலம் ஐபோன்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை, டாடா நிறுவனம் பெறும் எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments