சிறிய ரக விமானம் விமான நிலைய கட்டிடத்தில் மோதி விபத்து.. காயங்களுடன் உயிர்தப்பினார் விமானி..

0 1641

கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று, விமான நிலைய கட்டிடத்தின் மேற்கூரையில் மோதி விபத்துக்குள்ளானது.

திங்கட்கிழமை அன்று ஒற்றை எஞ்சின் கொண்ட செஸ்னா 172 ரக விமானத்தில் விமானி ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்தது.

கட்டுப்பாட்டை இழந்த விமானம் லாங் பீச் விமான நிலையத்தில், விமானங்களை நிறுத்திவைக்கும் ஷெட்டின் மீது மோதியதில், அதன் முன்பகுதி மேற்கூரைக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் விமானி காயங்களுடன் உயிர் தப்பியதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments