''உக்ரைனை நேட்டோவில் சேர்ப்பது குறித்த தெளிவான தகவல் வேண்டும்..'' - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..!
உக்ரைனை நேட்டோ கூட்டணியில் உறுப்பு நாடாக சேர்ப்பது குறித்த தெளிவான தகவலை தற்போதே தெரிவிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
லிதுவேனியாவில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நேட்டோ கூட்டணியில் இணைய உக்ரைனுக்கு தகுதி இருப்பதாகவும் தற்போது போர் நடைபெறுவதால் உக்ரைனை உடனடியாக கூட்டணியில் சேர்க்காவிட்டாலும், அதுதொடர்பான தகவலை இப்போதே தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
போர் சூழலில் உக்ரைனை உடனடியாக நேட்டோ அமைப்பில் சேர்க்க முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்த நிலையில், ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Comments