வன்முறை சம்பவங்கள் புதிய தலைமுறையின் எதிர்காலத்தை பாதிக்கும் - மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ்

0 1313

மேற்குவங்கத்தில் அதிகரித்துவரும் வன்முறைகளை ஒடுக்க உறுதியான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.

குண்டர்கள் மற்றும் சட்டத்தை மீறுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய அவர், கொல்கத்தா திரும்பிய நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வன்முறை சம்பவங்கள் புதிய தலைமுறையின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஆளுநர் ஆனந்த போஸ், எதிர்கால தலைமுறையினர் வாழ பாதுகாப்பான இடமாக மேற்குவங்கத்தை மாற்றுவோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments