கேட்டான் பாரு கேள்வி... டாஸ்மாக்கை மூடாமல் போதையை எப்படி ஒழிப்பீங்க? பள்ளி மாணவனின் தரமான சம்பவம்
திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தியாவை போதையில்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் மேடையில் பேசிய நிலையில், கீழே இறங்கிய அவரிடம் அரசே டாஸ்மாக்கை நடத்திக் கொண்டு இருக்கிறதே ? அதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா ? என்று 7 ஆம் வகுப்பு மாணவன் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேட்டான் பாரு கேள்வி... ஒரே கேள்வியில் சுற்றி நின்ற அரசு அதிகாரிகளை மிரளச்செய்த மாணவன் பிரணவ் ஆதித்யா இவர் தான்..!
திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த விரும்பினால் பெறுவீர் என்ற நூல் வெளியீட்டு விழாவில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் பங்கேற்று மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து அறிவுரைகளை எடுத்துக் கூறினார். அப்போது இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற வேண்டுமென பேசினார்.
இந்நிகழ்ச்சி முடிந்த நிலையில் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் பிரணவ் ஆதித்யா என்ற மாணவன் அவரின் அருகில் சென்று கைகளை பின்னால் கட்டிக் கொண்டு எந்த ஆரவாரமும் இல்லாமல் கேள்வி ஒன்றை எழுப்பினான். போதை இல்லாத நாடாக மாற்ற வேண்டுமென மேடையில் பேசும்போது கூறினீர்கள் ஆனால் அரசே டாஸ்மார்க் கடைகளை நடத்துகிறதே ..? அதற்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் ? என கேள்வி எழுப்பினான்
சுற்றி நின்ற அரசு அதிகாரிகள் ஆசிரியர்கள் வியந்து நிற்க , அரவிந்தன், அந்த மாணவனுக்கு பொறுமையாக விளக்கம் அளித்தார். “யுஎஸ்ஏ வில் மதுவை இரண்டு... மூன்று வருடங்கள் தடை செய்ததாகவும், அந்த பரிசோதனை தோல்வி அடைந்ததாகவும் அதற்கான தகவலை விக்கிப்பீடியாவில் படித்தால் தெரியும்” எனக்கூறியதோடு... “நல்ல கேள்வி” என்று மாணவனை வாழ்த்திச்சென்றார்
Comments