கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய காப்பர் கம்பிகள் திருட்டு

0 2947

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப் பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புடைய காப்பர் கம்பிகள் திருடப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில், தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்று, 3 மற்றும் 4-ம் அணு உலைகளின் கட்டிட பணிக்காக காப்பர் கம்பிகளை வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய இந்த கம்பிகள் திருடப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர் ரஞ்சித் அளித்த புகாரின் பேரில் கூடன்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இரண்டு அடுக்கு பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இந்த திருட்டு நடைபெற்றுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments