ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியில் வெள்ளப் பெருக்கு...இருட்டிலும் தொடர்ந்த மீட்புப் பணி..!!
ஜம்மு காஷ்மீரில் மழையால் செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏராளமான கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.
அக்னூர் மாவட்டத்தில் ஓயாத மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படடு இரவு நேரத்தில் வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் உதவி கேட்டு தவித்தனர்.
இதையடுத்து தயார் நிலையில் இருந்த காவல்துறையினரும், மீட்புக் குழுவினரும் 100க்கும் மேற்பட்ட கிராமத்தினரை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.
உயிரைப் பணயம் வைத்து இரவு நேரத்தில் நடைபெற்ற மீட்புப் பணியால் உயிர் பிழைத்த கிராம மக்கள் நன்றியும் நெகிழ்ச்சியுமாக காவல்துறையின் சேவையைப் பாராட்டினர்.
Comments