வான் தாக்குதலில் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு..!
சிரியாவில் அமெரிக்கா MQ 9 டிரோன்கள் மூலமாக நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர் உஸ்மா அல் முஹாஜிர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கிழக்கு சிரியாவில் தங்கியிருந்த தீவிரவாதத் தலைவரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த டிரோன்களை சில நாட்களுக்கு முன்பு ஈராக்-சிரியா எல்லைப் பகுதி அருகே ரஷ்ய போர் விமானங்கள் இடை மறித்து நேருக்கு நேராக மோத வந்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பான வீடியோ காட்சிகளை அமெரிக்கா வெளியிட்டது.இதனைத் தொடர்ந்து சிரியாவில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது அமெரிக்கா வான்தாக்குதலை அதிகரித்துள்ளது.வெளிநாடுகளில் தாக்குதல்கள் நடத்த சதித்திட்டம் தீட்டி வரும் தீவிரவாதத் தலைவர்களை குறி வைத்து அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
Comments