"நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தைத் தரையிறக்கும் 4வது நாடு இந்தியா" - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேச்சு
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 14-ந் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
டெல்லியில் நடந்த விழாவில் பேசிய அவர், நீண்டகாலத்துக்கு முன்பே விண்வெளிப் பயணத்தைத் தொடங்கிய நாடுகள் தற்போது இந்தியாவைப் பார்த்து ஆச்சரியம் அடைவதுடன், இணைந்து செயல்படவும் விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, 6 சக்கரங்களைக் கொண்ட ரோவர் வெளியே வந்து சந்திரனில் பணி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ரோவரில் உள்ள பல கேமராக்களின் உதவியுடன் படங்களைப் பெற முடியும் என்றும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
Comments