மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல் வன்முறை... மாநில தேர்தல் ஆணையம் மீது புகார்...!
மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் வன்முறை தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம் மீது எல்லைப் பாதுகாப்பு படை குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.
அதாவது, பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்த தகவல்களைக் கோரி பலமுறை கடிதங்கள் அனுப்பியும், மத்தியப் பாதுகாப்புப் படைக்கு, மாநிலத் தேர்தல் ஆணையம் எந்தவொரு தகவலும் அளிக்கவில்லை என்று எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி குலேரியா குற்றம்சாட்டியுள்ளார்.
பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை மட்டுமே கடந்த 7-ம் தேதி கூறியதாகவும், அவை; எவை என்பதை தெரிவிக்க வில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத் தக்கது.
Comments