சூடான் தலைநகரில் இராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 22 பேர் பலி....!
சூடான் தலைநகரில் இராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.
சூடானில் அதிகாரத்தை கைப்பற்ற அந்நாட்டு இராணுவமும், துணை இராணுவப்படையும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
தலைநகர் கார்டூமை ஒட்டியுள்ள ஓம்டுர்மான் மற்றும் பஹ்ரி நகரங்களில் பெரும்பாலான பகுதிகள் துணை இராணுவப்படை கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், ஓம்டுர்மானில் துணை இராணுவப்படையினரை குறிவத்து, இராணுவம் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடான் உள்நாட்டு போர் குறித்து கவலை தெரிவித்துள்ள ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டெரெஸ், இருதரப்பினரும் சண்டையை நிறுத்தி மக்களை பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments