ஈரானில் ஷா செராக் வழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் பலி

0 1094

ஈரானில் 13 பேரைப் பலி கொண்ட வழிபாட்டுத் தல தாக்குதல் வழக்கில் தொடர்புள்ள இருவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

அந்நாட்டில் ஷியா பிரிவினரின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான ஷா செராக் ஆலயம் பார்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த வழிபாட்டுத் தலத்தின் மீது கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 13 பேர் உயிரிழந்த நிலையில் 40 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎல் பொறுப்பேற்றுக் கொண்டது.  இந்த வழக்கில் 2 பேருக்கு ஈரான் உச்ச நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து இருவரும் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போடப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments