சினிமாவில் நடிப்பதற்காக ரூ.12 லட்சம் வழிப்பறி செய்த ஹீரோயின் இன்ஸ்பெக்டர்...! யாருடைய பணம் என்பது தான் டுவிஸ்ட்!!

0 2915

வாகன சோதனையின் போது புரோக்கரை மிரட்டி 12 லட்சம் ரூபாயை பறித்த பெண் காவல் ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர். கடற்படை அதிகாரிகளின் கருப்பு பணத்தை கச்சிதமாக கறந்த திருட்டு ஹீரோயின் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

ஹீரோயின் போல ஜோடி போட்டு நடனம் ஆடும் இவர் தான் காவல்ஆய்வாளர் ஸ்வர்ணலதா .!

விசாகப்பட்டினம் ஆயுதப்படை காவல் ஆய்வாளரான ஸ்வர்ணலதா வாகன தணிக்கை ஒன்றின் போது காரில் கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகளுடன் வந்த சூரிபாபு என்பவரை மடக்கினார். விசாரணையில் சூரிபாபு, 10 சதவீத கமிஷன் அடிப்படையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை, 500 ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொடுக்கும் புரோக்கர் என்பதும், காரில் இருந்த 90 லட்சம் பணத்தை, ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகளான ஸ்ரீனு, ஸ்ரீதர் ஆகியோருக்கு மாற்றிக் கொடுக்க எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

தனக்கு 20 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் மொத்த பணத்தையும் பறிமுதல் செய்யப் போவதாகவும் ஸ்வர்ணலதா மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் பேரம் பேசி 12 லட்சம் ரூபாயை ஸ்வர்ணலதாவிடம் கொடுத்து விட்டு மீதி பணத்தை ஸ்ரீனு மற்றும் ஸ்ரீதரிடம் ஒப்படைத்துள்ளார் சூரிபாபு. பணத்தை இழந்த கடற்படை அதிகாரிகள் இருவரும் விசாகப்பட்டினம் காவல் ஆணையர் விக்கிரமாவை சந்தித்து ரகசியமாக புகார் அளித்தனர்.

விசாரணையில், ஸ்வர்ணலதா 12 லட்சம் ரூபாய் ஆட்டைப் போட்டது உறுதியானது. இதனையடுத்து, ஸ்வர்ணலதா, புரோக்கர் சூரிபாபு மற்றும் ஆயுதப்படை காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஏ.பி 31 என்ற திரைப்படத்தில் ஸ்வர்ணலதா இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்து வருவது தெரிய வந்தது. அதற்காக நடன பயிற்சியாளருடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவும் சிக்கியது

அந்த படத் தயாரிப்பில் ஸ்வர்ணலதா பங்குதாரராக உள்ளதால், அதற்காகவே மிரட்டி பணம் பறித்தாக போலீஸார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments