வரன் தேடிய இளைஞருக்கு மாடலிங் படம் அனுப்பி ரூ.9 லட்சம் மோசடி... பெங்களூருவில் தங்கியிருந்து ஆந்திர இளைஞரை ஏமாற்றிய பெண் கைது...!
திருமணத்திற்கு வரன் தேடிய இளைஞருக்கு மாடலிங் பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி 9 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த 33 வயதான அசோக் சைதன்யா சென்னையில் தங்கியிருந்து கால் சென்டரில் வேலைப்பார்த்து வருகிறார்.
தெலுங்கு மேட்ரிமோனியல் தளத்தில் தனது விபரங்களை பதிவு செய்து வரன் தேடி வந்த நிலையில், ஷ்ரவணசந்தியா என்பவர் அறிமுகமானார்.
தனது புகைப்படத்திற்கு பதிலாக மாடலிங் செய்வோரின் படத்தை அனுப்பி வைத்து, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனை, உண்மையென நம்பிய அசோக்கிடம், செல்போனில் பேசி வந்த ஷ்ரவணசந்தியா பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
திருமணம் பற்றி கேட்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி வந்த ஷ்ரவணசந்தியா பின்னர் அசோக்கின் செல்போன் எண்ணை பிளாக் செய்தார்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அசோக் அளித்த புகாரில் விசாரணை நடத்திய ஆவடி போலீஸார், பெங்களூரில் தங்கியிருந்த ஷ்ரவணசந்தியாவை கைது செய்தனர்.
வரன் தேடுவோரை குறி வைத்து பணம் பறிப்பதற்காகவே அவர் 8 மின்அஞ்சல் மற்றும் டெலிகிராம் ஆஃப்பை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. அவரிடமிருந்த லேப்டாப், 3 செல்போன், 6 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.
Comments