குழந்தையே வேண்டாம்ன்னா திருமணம் ஏன் செஞ்சாங்க ? த.வா.க வேல்முருகனுக்கு கேள்வி..! முன்னாள் மனைவி ஆவேசம்
தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தனக்கு தர வேண்டிய ஜீவனாம்சத்தை தரமறுப்பதாக அவரது முன்னாள் மனைவி குற்றஞ்சாட்டி உள்ளார். 20 வருடம் அவருடன் வாழ்ந்ததால் தனது வாழ்க்கையே போச்சு என்று வேதனை தெரிவித்துள்ளார்.
கட்சியோட பெயரோ.. தமிழக வாழ்வுரிமைக் கட்சி.. தமிழகத்திற்கே வாழ்வதற்கு உரிமை வாங்கி தருவாராம், ஆனால் அவரை கல்யாணம் பண்ணிக் கொண்டு 20 வருடத்திற்கு மேல்வாழ்ந்த எனக்கு வாழ்வதற்கு உரிய நிவாரணமோ நியாயமோ வழங்கவில்லை என ஆதங்கப்படும் இவர் தான் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்திரி..!
தற்போதைய பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏவான வேல்முருகனுக்கும் தனக்கும் திருமணம் நடந்து 20 வருடங்கள் அவருடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும் , குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் தத்து குழந்தையும் வேண்டாம் என்று அவர் கூறியதால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றதாக காயத்திரி வேதனை தெரிவித்தார்
நீதிமன்ற உத்தரவுப்படி தனக்கு தரவேண்டிய மாதம் 25 ஆயிரம் ஜீவனாம்சத்தை கூட தரமறுப்பதாக கூறிய காயத்திரி, தான் சாதாரண எம்.எல்.ஏ என்றும் தனக்கு வருமானம் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்த வேல்முருகன், 3 வது முறையாக எம்.எல்.ஏ வாக உள்ளதாகவும், அவர் தற்போது ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எம்.எல்.ஏ வேல்முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயன்ற போது , அவர் அழைப்பை ஏற்கவில்லை.
Comments