குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாகப்போகிறது - ஜெயகுமார்
குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை பெற தகுதியுடையவர்கள் சமூக தன்னார்வலர்கள் மூலம் கணக்கெடுக்கப்பட உள்ளதால் திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாக மாறப்போவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் புதிதாக துவங்கப்பட்ட மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இரண்டு கோடி இல்லத்தரசிகளுக்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வீடு தேடி வரும் என்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு இன்று ஒரு கோடி பேருக்கு உரிமைத் தொகை என்று அரசு அறிவித்துள்ளது என்றார்.
Comments