ஜெராக்ஸ் கடை டூ ஐ.பி.எஸ்... நிஜ தன்னம்பிக்கை நாயகன் டி.ஐ.ஜி விஜயகுமார் ஐ.பி.எஸ்.... தடுமாற வைத்தது யார்.?
ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஜெராக்ஸ் கடை ஊழியராக வேலைக்கு சேர்ந்து படிப்படியாக போட்டித்தேர்வுகளை எதிர்கொண்டு 7 வது முயற்சியின் ஐ.பி.எஸ் ஆக தேர்சி பெற்றவர் மறைந்த டி.ஐ.ஜி விஜயகுமார். பலருக்கும் தன்னம்பிக்கை நாயகனாக தெரிந்தவர் விபரீத முடிவை தேடிக் கொண்ட சோகம் குறித்து விவரிக்கின்றது இந்தச் செய்தி..
மறைந்த கோவை டிஐ.ஜி விஜயகுமார் சில வருடங்களுக்கு முன்பு தனது முக நூல் பக்கத்தில், தான் எப்படி ஐ.பி.எஸ் ஆனேன் என்று பிறருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் பதிவு ஒன்றை எழுதி இருந்தார், அதில்... அப்பா செல்லையா வி.ஏ.ஓ , அம்மா ராஜாத்தி பள்ளி ஆசிரியை, பிளஸ் டூ வரை தமிழ் வழிக்கல்வித்தான் படித்தேன், ஒரே மகனான தன்னை டாக்டர் இல்லன்னா என்ஜினீயர் ஆக்கிப்பார்க்க ஆசை.. மெக்கானிக்கல் என்ஜினீயர் ஆயிட்டேன், சாதாரண கடை நிலை ஊழியரான அப்பாவை பார்த்து பார்த்தே வளர்ந்ததால் மாவட்ட அளவி அதிகாரம் படைத்த ஒரு அரசு அதிகாரி ஆகனும்னு மனசுல தோணிக்கிடே இருக்கும்.. எங்க ஊரை சுற்றி நிறைய கிரைம்... அதனால் ஐ.பி.எஸ் ஆகனுமுன்னு அதை நோக்கி பயணிக்க தொடங்கினேன் என்று கூறி உள்ளார் விஜயகுமார்
கல்லூரிப் படிப்பை முடிச்சதும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தங்கிப்படிக்கும் அளவுக்கு வசதி இல்லாததால் 1000 ரூபாய் சம்பளத்தில் ஜெராக்ஸ் கடையில் வேலைக்கு சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன்...4 மாதத்தில் வேலைப்பளு தாங்காமல் அந்த வேலையை விட்டு விட்டு அரசு வேலையில் சேர்வதற்காக குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வு எழுதினேன். இதில் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று 2000 வது ஆண்டில் இந்துசமய அற நிலையதுறையில் ஆடிட் இன்ஸ் பெக்டராக பணிக்கு சேர்ந்ததாகவும், அங்கிருந்து குரூப் 1 தேர்வு எழுதி 2002 ஆம் ஆண்டு டி.எஸ்.பியாக தேர்வானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப்பணியில் இருந்து ஐ.பி.எஸ் படிப்புக்காக 7 முறை முயன்று 7 வது முறையாக தான் ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்றதாகவும், தான் ஐ.பி.எஸ் தேர்வுக்கு விடுப்பு கேட்டதால் , தன்னை தொடர்ச்சியாக அதிகாரிகள் இடமாற்றம் செய்ததையும் விஜய் குமார் சுட்டிக் காட்டி உள்ளார். சிவில் சர்வீஸ் விண்ணப்பத்தில் விருப்ப பணியில் ஐ.பி.எஸ். என்று மட்டுமே எழுதினேன் என்று குறிப்பிட்டுள்ளார் விஜய்குமார்,
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிரவர்கள் , எவ்வளவு நாள் தான் படிச்சிகிட்டே இருப்ப என்று உறவினர்கள் கேள்வி கேட்டாலும், வீட்டில் எவ்வளவு சிரமம் வந்தாலும், அதனை தாங்கிக் கொண்டு வேறு வேலைக்கு செல்லாமல் படித்தால் நலம் என்று குறிப்பிட்டுள்ள விஜயகுமார் ஐ.பி.எஸ், இதுவே போதும் என்று எங்கேயும் தங்கி விடாதீர்கள்... ஓடிக் கொண்டே இருங்கள் வெற்றி உங்களை பின் தொடரும் என்று நம்பிக்கையுடன் கூறி உள்ளார்.
இவ்வளவு தன்னம்பிக்கை உள்ள ஒருவர் எதன் காரணமாக தடம் மாறி இந்த சோக முடிவை தேடிக் கொண்டார் என்பதே பலருக்கு வியப்பை ஏற்படுத்தும் கேள்வியாக உள்ளது.
Comments