கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

0 6245

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.

விஜயகுமார் மனைவி மற்றும் மகள் சென்னையில் வசித்து வரும் நிலையில் கோவையில் விஜயகுமார் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் உயர் அதிகாரிகள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் 3 நாட்களுக்கு முன்பு அவரது மனைவியும் மகளும் கோவை சென்று விஜயகுமாருடன் தங்கியிருந்தனர் என்று கூறப்படுகிறது.

நேற்றிரவு துணை ஆணையர் ஒருவரின் மகன் பிறந்தநாளில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய விஜயகுமார் காலை வழக்கம்போல் நடைபயிற்சி சென்று வந்தார் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். மன அழுத்தம் இருந்ததால் கடந்த சில தினங்களாக அவர் விடுப்பில் இருந்தார் என்றும் கூறப்படும் நிலையில்தான் இந்த தற்கொலை அரங்கேறியுள்ளது. தற்கொலை குறித்து விசாரணை நடத்த சென்னையிலிருந்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் கோவை விரைந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments