வரும் 14-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது சந்திராயன் - 3

0 1654

நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட உள்ள சந்திரயான் - 3 விண்கலம் வரும் 14-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி பிற்பகல் 2-35 மணிக்கு எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-3 ஏவப்படுகிறது. இதற்காக சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திற்கு சந்திரயான்- 3 விண்கலம் கொண்டுவரப்பட்டு எல்.வி.எம். - 3 ஏவூர்த்தியில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

நிலவின் தென் துருவத்திற்கு அருகே லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்கி ஆராயும் நோக்கில் சந்திரயான்- 3 விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதை ஏந்திச் செல்லும் எல்.வி.எம். - 3 ராக்கெட் 43 புள்ளி 5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டதாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments